ராமநாதபுரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 8-ஆக .உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் கரோனோ பரிசோதனக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் கடந்த 1-ம் தேதி பரமக்குடியைச் சேர்ந்த 2 முதியவர்களுக்கு கரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் குணமாகி நேற்று வீடு திரும்பினர்.

அதனையடுத்து சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்து, கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட தொழிலதிபரின் மனைவி, மகன் மற்றும் பரமக்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆகிய 3 பேருக்கு, கடந்த 14ம்- தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏப்.13-ல் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், ராமநாதபுரம் தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் என மூன்று பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மண்டபம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளைச் சேர்ந்த இந்த 3 ஆண்களும், சிகிச்சைக்காக இன்று ராமநாதபுரத்திலிருந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்படி தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்