தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வெளியே சுற்றியதாக தந்தை - மகன் உட்பட 3 பேர் மீது சென்னை போலீஸார் வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது, வெளியே சுற்றித் திரிந்ததாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சமூக விலகலை அனைவரும் கடைபிடித்து வீட்டில் இருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் கையில் முத்திரை இடப்பட்டு, அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 2-வது செக்டாரைச் சேர்ந்த சகுபார் சையத் (62), அவரது மகன் டபீப் நூர் முகமது (27) ஆகியோர் கடந்த 22-ம் தேதி இராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வந்தனர். அவர்களை 28 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மருத்துவர்களும் அவர்களை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் யாருக்கும் தெரிவிக்காமல் தடையை மீறி சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு புறப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீஸார் சென்று தந்தை, மகன் இருவர் மீதும் தொற்று நோய் தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மற்றொரு வழக்கு

இதேபோல், சீனாவுக்கு சென்று வந்த சென்னை அண்ணாநகர் 12-வது மெயின் சாலையைச் சேர்ந்த லட்சுமணன் அருண் என்பவரும் வீட்டில் தனியாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவரும் அரசு உத்தரவை மீறியதாக திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து லட்சுமணன் அருண் மீதும் தொற்று நோய் தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அரசு உத்தரவை தொடர்ந்து மீறினால் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

19 mins ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

56 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்