கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: 25 லட்சம் முகக்கவசங்கள் வாங்க முடிவு- அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, ‘‘தமிழகம்முழுவதும் பேருந்துகளை தொடர்ந்து தூய்மைப்படுத்தி வருகிறோம். மேலும் பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பேருந்து நிலையங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கு உள்ளாட்சித் துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தேவைப்படுவோருக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும். இதற்காக போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்கூறியது: மக்கள் தேவையற்றபயணங்களை தவிர்க்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் 5லட்சம் முகக்கவசங்கள் இருப்பில்உள்ளன. மேலும் 25 லட்சம் முகக்கவசங்களை வாங்கவுள்ளோம்.தேவைக்கும் அதிகமாகவே முகக்கவசங்கள் உள்ளன. முகக்கவசம் அனைவருக்கும் தேவையில்லை.

துறைரீதியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. கரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி இருந்தால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். மேலும், வைரஸ்தாக்கம் அதிகமுள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுமருத்துவர்கள் மூலம் அறிவுரைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்புகிறோம்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்