க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை- ஸ்டாலின் விசாரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (98). வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார். டாக்டர்கள் வீட்டுக்கே வந்து அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தேவையான சிகிச் சைகளை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மருத்துவ மனைக்குச் சென்று, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்ட றிந்தனர். டாக்டர்கள் குழுவினர் அன்பழகனின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

க்ரைம்

12 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்