பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம்: எஸ்.எஸ்.இராஜகோபாலன் கருத்து

By செய்திப்பிரிவு

பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம் என்று கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதேபோல், உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி இந்து தமிழ் இணையதளம் சார்பில் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலிடம் கருத்து கேட்டபோது, "டெல்லியில், கல்வி வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 26% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காமராஜர் காலத்தில் 34% வரை பட்ஜெட்டில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்போது கல்வி வளர்ச்சி கண்டது.

அதனால், எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம். மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு 20% கீழ் ஒதுக்கீடு செய்திருந்தால் அது சரியானதாக இருக்காது" என்றார்.

மேலும், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது போல் பலமுறை நடைமுறைப்படுத்தப்படாதது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்