சிங்கம் உலாவிய காட்டில்... ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் கவிதாஞ்சலி

By செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கவிதை எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவுக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

"முன்னூறு நாள் சுமந்து பெறாத அன்னையே - உனைப் பிரிந்து

மூன்றாண்டுகள் ஆகிவிட்டதா? - இன்னும்

எண்ணூறு ஜென்மங்கள் எடுத்தாலும்

மறக்காதம்மா உன் திருமுகம்..

உன் மூச்சை கடன் வாங்கி உழைக்கின்றோம் நித்தம் நித்தம்

உன் பேச்சை தினம் கேட்டு தொழுகின்றோம் வங்கம் பக்கம்

தொலைநோக்கு சிந்தனையால் பாதைபோட்டு தந்தாயம்மா

காலை எடுத்து வைக்கின்றோம் நீயே எங்கள் தாயம்மா..

சிங்கம் உலாவிய காட்டில் சிறுநரிகளின் ஊளைச்சத்தம் கேட்குதம்மா

உன் தங்கநிற முகம்காட்டி சிந்தைகுளிர் குரல் கேட்டால் ஓட்டம்

பிடித்துவிடும் ஓநாய்கூட்டம் - வாட்டம் நிரம்பி நிற்கின்றோம் தாயே,

வரமெனவே வந்தருள்வாயே...

நினைவெல்லாம் நீயே தானம்மா, கண்ணீரால் நினைக்கின்றோம் உன்

துயிலிடத்தை - தமிழக மக்களின் வாழ்வுயர வந்துதித்த தாயே உன்

கனவினை நனவாக்குவதே இவ்வுயிரின் வேலையம்மா

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளை இல்லாமலாக்குவோம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானிருந்து ஆட்சி செய்யும் தாரகையே

நீ கட்டி வைத்து கொடிபிடித்து ஆட்சி நடத்திய கோட்டையில்

அதிமுகவின் பட்டொளி எந்நாளும் பறந்திடவே உழைத்திடுவோம் தாயே,

அதை இந்நாளில் உறுதியேற்கிறோம் தாயே..."

என அமைச்சர் ஜெயக்குமார் கவிதை எழுதியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

14 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்