காஞ்சி பெருநகராட்சி குப்பை கிடங்கில் புதிய தொழில்நுட்பத்தில் குப்பை அகற்றும் பணிகள்: பூங்காவாக மேம்படுத்த திட்டம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

திருக்காலிமேடு நகராட்சி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள 1 லட்சம் டன் குப்பையை, பயோமைனிங் தொழில்நுட்பத்தில் அகற்றும் பணிகளை தொடங்கியுள்ள நகராட்சி நிர்வாகம், அப்பகுதியை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் 51 வார்டுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், பல வணிக நிறுவனங்கள் அமைந் துள்ளன. இங்கிருந்து வெளியேற் றப்படும் குப்பை மற்றும் பிளாஸ் டிக் கழிவுகளை சேகரித்து கொட்டு வதற்காக, திருக்காலிமேடு பகுதி யில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இதில், கடந்த 16 ஆண்டு களுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

மேலும், நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பை கிடங்கு அருகே இயற்கை உரம் தயாரிப்புக்காக பிரம்மாண்ட கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பை சேகரமாகிறது. இதில் 15 டன் பிளாஸ்டிக் கழிவாக உள்ளது. அந்த, பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத் தாத வகையில் சிமென்ட் தொழிற் சாலைகளில் எரிபொருளாக பயன் படுத்தி வருவதாக தெரிகிறது.

காஞ்சி நகராட்சியில் சேகர மாகும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரம்பலூர் மற்றும் அரியலூரில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற் சாலைகளுக்கு ஒப்பந்த அடிப் படையில், நகராட்சி நிர்வாகம் டன் கணக்கில் அனுப்பி வருகிறது. எனினும், நத்தப்பேட்டை ஏரிக்கரை யில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை தேங்கியுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல் கலை. தொழில்நுட்ப வல்லுநர் களின் உதவியோடு ரூ.7 கோடி செலவில் பயோமைனிங் எனும் தொழில்நுட்பத்தில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் தேங்கியுள்ள குப் பையை அகற்றும் பணிகளை நக ராட்சி நிர்வாகம் தொடங்கியுள் ளது. மேலும், குப்பையை அகற்றி யதும் அப்பகுதியை பூங்காவாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

20 ஏக்கர் பரப்பளவில் தேங்கி யுள்ள 1 லட்சம் டன் குப்பையில் பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டை, ரப்பர், செருப்பு, டயர், தேங்காய் நார், இரும்பு ஆகியவை தனித்தனியாக பிரித்து அகற்றப்பட உள்ளன. இதற்காக, ஏற்கெனவே ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசின் நிர்வாக அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பல்கலை. தொழில்நுட்ப வல்லுநர்கள் குப்பை கிடங்கை நேரில் பார்வையிட்டு, பணிகளை முடிக்க பயோமைனிங் என்ற தொழில்நுட்ப திட்டங்களை வழங்கியுள்ளனர். இதன்மூலம், பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. தற்போது, குப்பையை சலிப்பதற்கான இயந்திரம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. குப்பை அகற் றப்பட்டதும், பொழுது போக்கு பூங்காவாக மேம்படுத்த திட்ட மிட்டுள்ளோம். இதனால், நத்தப் பேட்டை ஏரியை மீண்டும் பாசனத்துக்கு பயன்படும் நீர் நிலையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

11 mins ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்