தென்காசி மாவட்டத்தில் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் 25-ம் தேதி நடைபெறுகிறது

By த.அசோக் குமார்

தென்காசி

புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள தென்காசி மாவட்டத்தில் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் 25-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் நேற்று உதயமானது. தமிழக முதல்வர் பழனிசாமி தென்காசி மாவட்டத்தைத் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதையடுத்து, புதிய மாவட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமைதோறும் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் வருகிற 25-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன் பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வேலை வாய்ப்பு

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்