தமிழக காவல் துறைக்கு தகவல் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை: கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

காவல் துறைக்கு தகவல் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக காவல் துறை தொழில்நுட்ப பிரிவின் கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள் ஆப்கோ மற்றும் டிஜிட்டல் மொபைல் ரேடியோ (டிஎம்ஆர்) திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் செயல்முறைகளில் ரூ.350 கோடி முறைகேடுகள் நடந்துள்ளன என்று செய்திகள் வெளிவந்துள் ளன. தமிழகத்தின் 10 மாவட்டங் களுக்கான டிஜிட்டல் மொபைல் ரேடியோ திட்டங்களின் டெண்டர் கள் நடைமுறைகளை மீறி ‘வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறு வனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசார ணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது எனவும் செய்திகள் வெளிவந் துள்ளன.

பத்திரிகைகள், சமூக ஊடகங் களில் சுட்டிக்காட்டியபடி ஆப்கோ மற்றும் டிஎம்ஆர் திட்டங்களில் ரூ.350 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது சரியானதல்ல. இரண்டு நகரங்களில் ரூ.86.57 கோடிக்கு ஆப்கோ திட்டம் நிறை வடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம் ‘வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மூலம் செயல் படுத்தப்படவில்லை. 10 மாவட்டங் களுக்கான டிஎம்ஆர் திட்டங்கள் மொத்தம் ரூ.57.49 கோடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3.49 கோடி மதிப்புள்ள ஒரு மாவட் டத்துக்கான டெண்டர் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களுக்கு டிஎம்ஆர் திட்ட டெண்டர்கள் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. டிஎம்ஆர் மற்றும் ஆப்கோ திட்டங்களில் எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் இதுவரை எந்தத் தொகையும் வழங்கவில்லை.

தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. காவல் துறையின் தேவை பல்வேறு நிலைகளில் முறை யாக ஆராயப்பட்டு கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகள் உரிய ஒப்புதலுடன் மேற்கொள்ளப் படுகின்றன.

தொழில்நுட்பப் பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தொழில்நுட்பப் பிரிவின் சில அலுவலர்கள் நடைமுறை தவறு களில் ஈடுபட்டதாக தெரியவந்துள் ளது. இது தொடர்பாக டிஜிபி பரிந் துரையின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்