2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின்பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும்.

அடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

புனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

சுற்றுச்சூழல்

37 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்