பூம்பூம் மாட்டுக்காரர்களை மறக்கக் கூடாது; ஆசிர்வாதம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை பூம்பூம் மாடு ஒன்று ஆசிர்வதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தன் வீட்டின் அருகே நேற்று (அக்.7) மாலை அமைச்சர் ஜெயக்குமார் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பூம்பூம் மாடு ஒன்று வந்தது. அதனைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம் மாட்டுக்காரரிடம் சிறிது நேரம் உரையாடினார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரை ஆசிர்வதிக்குமாறு, மாட்டிடம் பூம்பூம் மாட்டுக்காரர் கூறினார். உடனே பூம்பூம் மாடு அமைச்சர் ஜெயக்குமாரை ஆசிர்வதித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், பூம்பூம் மாட்டுக்காரரின் பேச்சு தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கீழடி நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில் இவர்களைப் போன்றவர்களைக் காப்பாற்றுவதும், கீழடி போன்ற நாகரிகத்தைக் காப்பாற்றுவதும் ஒன்றுதான் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 secs ago

சினிமா

18 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

37 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்