வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் 11 கேள்விகள்

By செய்திப்பிரிவு

வாகனங்களில் வேக கட்டுப் பாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். கடந்த 10 ஆண்டு களில் அவ்வாறு பொருத்தாத வாகனங்கள் மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்தகைய வாகனங்களால் எத்தனை உயிரிழப்புகள் ஏற் பட்டுள்ளன என்பது உள்பட 11 கேள்விகளை மத்திய, மாநில அரசுகளிடம் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

அரசு பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

போக்குவரத்து வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் ஏராளமான விபத்துகளும், உயிரி ழப்புகளும் ஏற்படுகின்றன. பலரும் ஊனமாகிறார்கள். மத்திய அரசு மோட்டார் வாகன சட்டப்பிரிவு 118-ன்படி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தி விட்டால், குறிப்பட்ட வேகத் துக்கு மேல் வாகனத்தை இயக்க முடியாது. எனவே, நாடு முழுவதும் இயக்கப்படும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறை செய லாளர்களை இவ்வழக்கின் எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் கீழ்க்கண்ட கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

* அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?

* அவ்வாறு பொருத்தாத வாக னங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

* வாகனத்தைப் பதிவு செய் யும்போதே வேகக் கட்டுப் பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

* கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

* வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தாத வாகனங்களால் எத்தனை விபத்துகள் நேரிட் டுள்ளன?

* அதில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு வரும் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி என். கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

ஜோதிடம்

15 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்