தமிழகத்தில் 40% மதுக்கடைகளை பாமக மூடியது: அன்புமணி பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தில் 40% மதுக்கடைகளை மூடியது பாமக என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்து அவசர நிலைப் பிரகடனம் தேவை என்று வலியுறுத்தி பாமக சார்பில், சென்னையில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அன்புமணி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ''தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட, உச்ச நீதிமன்றம் சென்று ஆணையைப் பெற்றுள்ளோம். அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளை மூடி இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் மதுக்கடைகளில் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், 40 சதவீத மதுக்கடைகளை மூடியுள்ளோம். பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.

இதைக் கொள்கை முடிவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதிமுக, திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றதே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனினும் தொடர்ந்து எங்களின் போராட்டம் தொடரும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்'' என்று அன்புமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்