அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பிய விவகாரம்: எஸ்.ஐ உட்பட 3 பேருக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

கோவை 

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி, தப்பிய விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ உட்பட 3 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கோவை போளுவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்தவர் விஜய ராஜ்(23). இவர், மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் ஆலாந்துறை காவல் நிலையத்தில் உள்ளன. இவரை போலீஸார் தேடிவந்த நிலையில், கடந்த 15-ம் தேதி ஆலாந்துறையை சேர்ந்த லோகநாதன்(49), சிவனே சன்(30), விஜயராஜ் ஆகியோரி டையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட 3 பேரும் காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை புறக்காவல் நிலையம் சார்பில், ஆலாந்துறை காவல் நிலையத் துக்கு தெரிவிக்கப்பட்டது. விஜய ராஜ், தங்களால் தேடப்பட்டுவரும் நபர் என்பதை ஆலாந்துறை காவல்துறையினர் உறுதிப் படுத்தினர். இதையடுத்து அவர் தப்பி விடாமல் தடுக்க, காருண்யா நகர் உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், ஆலாந்துறை தலைமைக் காவலர் சிவபிரகாஷ் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அவர்கள் விஜயராஜின் கையில், காப்பு மாட்டி கண்காணித்தனர். காயம் தொடர்பாக, எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருந்ததால் அவரது கையில் இருந்த காப்பை காவல்துறையினர் கழற்றியபோது, விஜயராஜ் காவலர்களை தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, பணியில் இருந்த எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.எஸ்.ஐ ஜேம்ஸ், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்