பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல்; தமுமுக பேச்சாளர் கைது: கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிகாட்டில் அண்மையில் நடை பெற்ற தமுமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோ ருக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய அந்த இயக்கத்தின் தலை மைக் கழக பேச்சாளரை மங்கல மேடு போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முத்தலாக் தடை சட்டம், என்.ஐ.ஏ, யுஏபிஏ சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு நீக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிகாடு பேருந்து நிலையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்துகொண்ட, அந்த அமைப்பின் தலைமைக் கழக பேச்சாளர் எம்.முகமது ஷரீப் பேசிய ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையைக் ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக எம்.முகமது ஷரீப் பேசுவதாக அந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது. இதுகுறித்து மங்கலமேடு காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில், சர்ச்சைக் குரிய வகையில் பேசியதாக திருச்சி பீமநகரைச் சேர்ந்த எம்.முகமது ஷரீப்(24) மீது, மங்கலமேடு போலீஸார் ஐபிசி 188, 189, 153ஏ, 504, 505, 506(1) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

திருச்சி சிறையில் அடைப்பு

பெரம்பலூர் ஜேஎம் 2 நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.முகமது ஷரீப்பை, செப்.9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் கருப்பசாமி உத்தரவிட்டதை அடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிகாட்டில் கடந்த 23-ம் தேதி நடை பெற்ற ஒரு கூட்டத்தில், ஷெரீப், பேசிய கருத்துகளை தமுமுக தலைமை நிர்வாகக் குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. தமுமுக தலை மைக் கழக பேச்சாளர் பொறுப் பில் இருந்து அவர் நீக்கப்படு கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்