திருவாரூர் அடுத்த தப்பளாம்புலியூரில் 20 அடி உயர கோயில் தேரை சாய்த்து வணங்கும் விநோதம்

By செய்திப்பிரிவு

திருவாரூர்

திருவாரூர் அடுத்த தப்பளாம் புலியூரில் குளுந்தாளம்மன் கோயில் ஆவணித் திருவிழாவில் தேரைச் சாய்த்து பக்தர்கள் மீண்டும் தூக்கிச் செல்லும் விநோத நிகழ்வு நடைபெற்றது.

தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள பழமையான இக்கோயிலில் அருள்பாலிக்கும் பிடாரி குளுந் தாளம்மனுக்கு ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படும். சக்க ரம் இல்லாத இந்தத் தேரை 2 வாரைகள் (பெரிய பல்லக்குக் கம்புகள்) மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கிக் கொண்டு ஆடியபடி வீதிவீதியா கச் செல்வர். இடமும் வலமுமாக ஆடியபடி தூக்கிச் செல்லப்படும் தேர் எங்காவது ஒருசில இடங்க ளில் பாரம் தாங்காமல் பக்கவாட் டில் சாய்ந்துவிடும்.

அப்போது தேரில் உள்ள அம் மனும், பூசாரியும் சாய்ந்து விழுவ தும் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கிச் செல்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இப்படிச் சாய்ந்து, மீண்டும் எழுந்து செல்வ தால் இவ்வூர் அம்மன், விழுந்து எழுந்தாளம்மன், குளுந்தாளம்மன் என அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு தேர் யார் வீட்டின் முன்பு சாய்கிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பதும், யாருடைய வயலில் சாய்கிறதோ அந்த வயலில் விளைச்சல் பெருகும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல ஆடியபடி தூக்கிச் சென்றனர். கோயிலில் இருந்து தூக்கிச் செல்லப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நேற்று நிலையை அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

25 mins ago

தமிழகம்

41 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்