விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எலிகளைப் பூட்டி ஏர் ஓட்டும் விநாயகர் வடிவில் சிலை வடிவமைப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எலிகளை ஏர் பூட்டி விநாயகர் உழுவது போன்ற வடிவில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அளவுகளில், பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், சிலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட் டத்தில் உள்ளன. இவ்வாறு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் சில வித்தியாசமான தோற்றத்தில் காண்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையைச் சேர்ந்த டி.பெரியசாமி, 2 எலிகளை கலப்பையில் பூட்டி விநாயகர் ஏர் உழுவது போன்ற சிலையை செய்துள்ளார். இந்த சிலை செய்யும் பணி முடிக்கப்பட்டு, வர்ணம் தீட்டுவதற்காக காத்தி ருக்கிறது.

இதுகுறித்து டி.பெரியசாமி கூறியபோது, “தலா 2 அடியில் 2 எலிகளை கலப்பையில் பூட்டி, 3 அடி உயர விநாயகர் விவசாயி போன்று இடுப்பில் துண்டும், தலையில் உருமாவும் கட்டிக்கொண்டு, சாட்டையால் அடித்து ஏர் ஓட்டிச் செல்வது போன்று வடிவமைக் கப்பட்டுள்ளது. 5 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள இந்த சிலை சிலட்டூரில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது” என்றார்.

இதுகுறித்து சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுத்த சிலட்டூரைச் சேர்ந்த பாலா கூறியபோது, “அழிந்து வரும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், அனைவரும் விவசாய பணிகளில் ஈடுபட வேண் டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இவ்வாறு சிலை செய்ய ஆர்டர் கொடுத்தோம். விளைநிலம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதில் இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

42 mins ago

க்ரைம்

46 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்