சென்னையில் குறைந்தபட்சம் 15 ஆயிரம் இடங்களில் உறை கிணறுகளை நிறுவி மழைநீரை சேகரிக்க மாநகராட்சி திட்டம்: பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் செயல்படுத்த முடிவு

By செய்திப்பிரிவு

ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் குறைந்தபட்சம் 15 ஆயிரம் இடங் களில் உறை கிணறுகளை நிறுவி மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த 3 ஆண்டு களாக பருவமழை குறைந்ததால், குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டன. அதனால் நிலத்தடிநீரை பொதுமக்கள் வரம் பின்றி 3 ஆண்டுகளாக உறிஞ்சி யதால், 90 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறண்டன. பின்னர் சென்னை மக்கள் அனைவரும் குடிநீர் வாரிய நீரை மட்டுமே நம்பி யிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை தமிழக அரசும், சென்னை மாநக ராட்சி நிர்வாகமும் தீவிரமாக மேற் கொண்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தலா ஒரு குழு அமைத்து வீடு வீடாக சென்று மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு இருப்பதை உறுதி செய்து வருகிறது. புதிதாக 2 லட்சம் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகாலில் உறை கிணறுகள் அமைத்தும், சாலையோரம் மழைநீர் வடி காலுக்கு அருகில் மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி யும் மழைநீரை சேகரித்து வரு கிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்யும் குழுவினர் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளில் ஆய்வு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 62 ஆயிரம் வீடுகளில் கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பை பல்வேறு வழிகளில் சேமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்படும் மழைநீர் வடிகாலில் உறை கிணறுகளை அமைத்து, அதில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைநீர் வடிகால் துறை சார்பில் இதுவரை 215 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரம் இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மண்டலத்துக்கு 1,000 இடங்கள் வீதம், குறைந்தபட்சம் 15 ஆயிரம் இடங்களில் உறை கிணறுகள் மூலம் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

மழைநீர் வடிகால் ஓரங்களில், மண், இலை மற்றும் காகிதக் கழிவுகள் அடைப்பு ஏற்படுத்தாமல் இருக்க வடிகட்டிகள் அமைக்கப் படுகின்றன. அவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத் தப்பட்டு வருகின்றன. இதுவரை 7 ஆயிரம் இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, மாநகராட்சி தெருக்களில் பொதுமக்கள் மற் றும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி 45 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்