சிறுக, சிறுக சேமித்த உண்டியல் பணத்தில் வாங்கி துணிப்பை, மரக்கன்றுகள் வழங்கும் துபாய் சிறுவன்

By செய்திப்பிரிவு

சிவகங்கை

சிவகங்கையில் பிளாஸ்டிக் ஒழி ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுக, சிறுக உண் டியலில் சேமித்த பணத்தில் துணி ப்பை, மரக் கன்றுகளை வாங்கி மாணவர்களுக்கும், பொதுமக்க ளுக்கும் துபாயைச் சேர்ந்த சிறுவன் விநியோகித்து வருகிறான்.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண் மலடாகிறது. மனிதன், விலங்கு களுக்குப் புற்றுநோய் உண்டா கிறது. சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு ஜன.1 முதல் 14 வகையான பிளாஸ் டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித் துள்ளது. இருந்தபோதிலும் அவற் றின் பயன்பாட்டைக் குறைக்க முடியவில்லை.

இந்நிலையில், துபாய் நாட்டில் இருந்து விடுமுறைக்காகச் சொந்த ஊரான சிவகங்கை அருகே நாலு க்கோட்டைக்கு வந்துள்ள சிறுவன் தனுஷ்குமார் (11) பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுக, சிறுகச் சேமித்த உண்டியல் பணத்தில் துணிப்பை, மரக்கன்றுகளை வாங்கி மாண வர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறார்.

அவரது தந்தை சிவக்குமார், தாயார் பொன்னிமலர் துபாயில் பொறியாளர்களாக உள்ளனர். அங்குள்ள பள்ளியில் தனுஷ்குமார் 5-ம் வகுப்புப் படிக்கிறார். சிறுவயதி லேயே பிளாஸ்டிக்கின் தீமையை அறிந்த அவர், துபாயில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பதக்கங்களையும், பரிசுகளையும் குவித்துள்ளார்.

மேலும் அந்நாட்டு மக்க ளின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுக்கும் காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அவரது தாய், தந்தை பயின்ற சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், பொதுமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிப் பை, மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது தனுஷ்குமார் கூறிய தாவது: துபாயில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடல்வாழ் உயிரி னங்கள் அழிந்து வருகின்றன.

அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென் றபோது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருந்தது என்னைப் பாதித்தது.

இதனால் துபாய் போன்று தமிழகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தேன்.

முதற்கட்டமாக பள்ளிகளிலும், அதைதொடர்ந்து சந்தைகள், கடை வீதிகளிலும் துணிப்பை, மரக்கன்றுகளை வழங்க உள் ளேன்.

உண்டியல் சேமிப்பு மட்டுமின்றி துபாயில் பல்வேறு போட்டிகளில் வென்றதன் மூலம் கிடைத்த பணத்தையும் இந்த விழிப்புணர்வுக்காகச் செலவழித்து வருகிறேன், என்று கூறினார்.

இச்சிறுவனின் செயல்பாட்டை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 mins ago

விளையாட்டு

9 mins ago

இந்தியா

13 mins ago

உலகம்

20 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்