திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்: தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வரைமுறையற்ற அதிகாரம்?

By செய்திப்பிரிவு

இரா. கார்த்திகேயன்

திருப்பூர்

தாராபுரம் வட்டம் குண்டடம் காளி பாளையம் தொடக்கப்பள்ளியும், மூலனூர் ஒன்றியம் ஓசபாளையம் தொடக்கப்பள்ளியும் தற்போது மாணவர்கள் சேர்க்கை இன்றி தற்காலிகமாக மூடப்பட்டு நூல கங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அ.ஜெயராஜ் கூறிய தாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஓசபாளையம் மற்றும் காளிபாளை யம் ஊராட்சி தொடக்கப்பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை இல்லையெனக்கூறி மூடி உள்ளார் கள். பல்வேறு காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் நலன் பாதுகாக் கப்படும் என்றார்.

அவிநாசி ஒன்றியம் செமியாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாதம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1952-ம் ஆண்டு முதல் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாததால், கல்வி அலுவலர்கள் பள்ளியை மூட முடிவெடுத்துள்ளனர். 2017-ம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். 2019-ம் ஆண்டு சேர்க்கை குறைந்து ஓர் மாணவர் மட்டும் படித்து வந்தார். இப்பள்ளி மாணவரும் ஆசிரியையும் மாற்றப்பட்டு விட்டார்கள் என கூறப்பட்டது.

குறையும் எண்ணிக்கை

இது தொடர்பாக திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தா ‘இந்து தமிழ்’ செய்தியாளரி டம் கூறியதாவது: மூலனூர் மற்றும் குண்டடம் ஒன்றியத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், காளிபாளையம், ஓசபாளையம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப் பட்டு நூலகங்களாக மாற்றப்பட் டுள்ளன. அங்கு எதனால் மாணவர் களின் எண்ணிக்கை குறைந்தது என்பது பற்றி தெரியவில்லை. கடந்த காலங்களில் தொடர்ச்சி யாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான் தற்போது தான் இங்கு பணிக்கு வந்துள்ளேன்.

அவிநாசி அருகே நாதம்பாளை யம் பள்ளி மூடப்படவில்லை. கிராம மக்கள் 10 நாள் அவகாசம் கேட்டுள் ளனர். மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதாக ஊர் மக்கள் சொல்லி உள்ளனர்.

தற்போது அந்த பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக புதிதாக 4 மாணவர்கள் சேர்ந்துள்ள னர். மொத்தம் 5 மாணவர்கள் உள்ளனர் என்றார்.

தவறான கொள்கை?

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கூறியதாவது: தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வரைமுறையற்ற அதிகாரம் தான் இன்றைக்கு அரசுப் பள்ளிகள் மூட முக்கியக் காரணம். நியாய விலைக் கடைக்கு குறிப்பிட்ட எல்லை இருப்பது போல், தனியார் பள்ளிகளுக்கு எவ்வித எல்லையும் இல்லை. கிராமத்தில் உள்ள பெற்றோர், 20 கி.மீ. தாண்டியும் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை இயல்பாகவே குறைகிறது. அரசு தொடக்கப்பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன.

இதில் பாடத்துக்கு ஓர் ஆசிரியர் மற்றும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் முறையில் நியமிக்க வேண்டும். அரசின் தவறான கொள்கை முடிவால் தான் இன்றைக்கு அரசு தொடக்கப்பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கொள்கை முடிவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிழையாகும். கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்