சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை

By செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப் பதால் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீ ஸார் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

24 மணி நேரமும் சோதனை

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பார்சல் பிரிவில் கூடுதல் கவனத்துடன் செயல்பட ரயில்வே ஊழியர்களிடம் கூறப்பட்டுள் ளது.

பார்சல் பகுதி முழுவதையும் போலீஸார் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் வாகன சோத னையும் தீவிரப்படுத்தப்படுகிறது. பகலிலும் வாகன சோதனைகள் நடத்த அனைத்து காவல் நிலை யங்களுக்கும் உத்தரவிடப்பட் டுள்ளது. ரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி, திருவண்ணா மலை அண்ணாமலையார், திரு நெல்வேலி நெல்லையப்பர் கோயில்களில் தொடர் சோதனை கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் வைத்து கடும் சோத னைக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை கோயம்பேடு உட்பட அனைத்து மாவட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலும் அதிக அளவிலான போலீஸார் நிறுத்தப் பட்டு சந்தேக நபர்கள் கண்காணிக் கப்படுகின்றனர்.

சுதந்திர தின விழா நடக்கும் அனைத்து அரசு அலுவலகங் களையும் கண்காணிக்க போலீஸா ருக்கு அதிகாரிகள் உத்தரவிட் டுள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், முக்கிய பள்ளிக் கூடங்களில் வெடிகுண்டு சோதனை கள் நடத்தப்பட உள்ளன.

அதிகாரிகள் ஆலோசனை

பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களையும் போலீ ஸார் கண்காணித்து வருகின்றனர். சுதந்திரதின பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் தங்களுக்கு கீழுள்ள அதி காரிகளை அழைத்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத் தினர். அதைத் தொடர்ந்து பாது காப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வர்த்தக உலகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்