தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைகள் ஆய்வு பணி தொடக்கம்: ஏசி உட்பட 10 அம்சங்களில் ஒன்று இருந்தாலும் சலுகை பறிப்பு

By செய்திப்பிரிவு

மதுரை

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏசி உட்பட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றுள்ள குடும்ப அட்டைகளின் முன்னுரிமையைப் பறிப்பது குறித்து அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வுப்பணியைத் தொடங்கி யுள்ளனர்.

தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாகவும், வசதி படைத்த பல குடும்பங்கள் மானியத்தில் பொருட்களைப் பெறும் தகுதியுள்ள முன்னுரிமை அட்டைகளைப் பயன் படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.

இதைக் களைய தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜூலை 11-ம் தேதி மாநில உணவுத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள முன்னுரிமைக் குடும்ப அட்டைகள், முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட அட்டைகள் குறித்து முழுமையான தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

எந்தெந்த அட்டைக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை வெளியிட்டுள்ளது.

முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும் பங்களுக்கான 10 அடிப்படை விதி கள்: வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஓர் உறுப்பின ராகக் கொண்ட குடும்பம், தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினர் களாகக் கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத் துள்ள பெரு விவசாயியைக் கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் அல்லது ஓய்வு பெற்றவர் களை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 4 சக்கர வாகனத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத் துள்ள குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந் தும் பெறப்படும் ஆண்டு வரு மானம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உள்ள குடும்பம்.

இந்தக் குடும்பங்கள் மானியம் பெறத் தகுதியில்லாததாக கணக் கிடப்படுகிறது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் தற்போது பய ன்படுத்தினால் அது மாற்றப்படும்.

ஆய்வுப்பணி தொடங்கியது

அரசின் உத்தரவைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ஆய்வுப்பணி நேற்று தொடங்கியது. உணவுப்பொருள் வழங்கல் துறையில் உள்ள வட்டாட்சியர்கள் தலைமையிலான அதிகாரிகள் வீடு வீடாக இப்பணியைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “அரசு அறிவித்துள்ள 10 தகுதிகளில் ஏதேனும் ஒன்று பெற்றிருந்தாலும் அந்தக் குடும்ப அட்டைகள் முன்னுரிமை பெறத் தகுதியற்றவை. தற்போது முன்னுரிமை பெறும் தகுதியைப் பெற்றிருந்தால் அதை நீக்கலாம் என பரிந்துரை செய்யப்படும். அப்படிச் செய்தால், அந்த அட்டைதாரர்கள் நியாய விலைக் கடையில் அரிசி பெற முடியாது. சர்க்கரை பெற முடியும். இனி வரும் காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் ஏதும் பெற முடியாத சூழல் ஏற்படலாம். மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதன் தாக்கத்தையும் இந்தக் குடும்பத்தினர் சந்திக்க வேண்டியிருக்கும்.

முதற்கட்டமாக 4 நாட்களுக்குள் ஒரு மண்டலத்துக்கு 100 அட்டைகள் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்று மதுரை மாநகராட்சிப் பகுதியான திருநகர், திருப்பரங்குன்றம், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடந்தது. முதல் நாள் ஆய்வில் நகர் பகுதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான அட்டைகளின் முன்னுரிமையை ரத்து செய்ய வேண்டிய சூழலே உள்ளது” என்றார்.

மதுரை மாவட்டத்தில் முன்னு ரிமை இல்லாத அட்டைகள் 4,84,601, (NPHH-NON PRIORITY HOUSE HOLDER) முன்னுரிமை உள்ள அட் டைகள் 3,52,927 (PHH-PRIORITY HOSE HOLDER) அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகள் 57,555 உள்ளன. இதில் முன்னுரிமை உள்ள 3,52,927 குடும்ப அட்டை கள் மட்டுமே ஆய்வு செய்யப்படு கின்றன. ஜூலை 20-க்குள் 1,100 அட்டைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

29 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்