உலக சுகாதார நிறுவனம் நடத்தும் ஹெபடைட்டிஸ் வைரஸ் ஒழிப்பு மாநாட்டில் பொது மருத்துவமனை டாக்டர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

உலக சுகாதார நிறுவனம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்குள் ஹெபடைட்டிஸ் வைரஸ் ஒழிப்பு மாநாட்டில் தென்னிந்தியா சார்பில் சென்னை அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவ சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் நாராயணசாமி பங்கேற்று உரையாற்றுகிறார்.

உலக கல்லீரல் அழற்சி தினம் (World Hepatitis Day) ஜூலை 28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்தான ‘கல்லீரல் அழற்சியை தடுப்பது உங்கள் கையில்’ என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுத்த மத்திய, மாநில அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 28-ம் தேதி டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தில் 2020-ம் ஆண்டுக்குள் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸை ஒழிப்பது குறித்த மாநாடு நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து கல்லீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 4 பேர் கலந்து கொள்கின்றனர்.

தென்னிந்தியா சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவ சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

முன்னதாக நேற்று லக்னோவில் நடந்த ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் குறித்த மாநாட்டில் டாக்டர் நாராயணசாமி பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

52 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்