நாளை அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு: 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி - தேர்வை கண்காணிக்க பறக்கும் படை

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆய்வக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் விண்ணப்பித் திருக்கிறார்கள். முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தி அதன் பிறகு நேர்காணல் மூலம் நியமனம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, முதல்கட்ட தேர்வான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நாளை காலை (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார். தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அந்தந்த மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:

ஆய்வக உதவியாளர் தேர்வை மாவட்ட அளவில் கண்காணிக்க இயக்குநர்கள், இணை இயக்கு நர்கள் என 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் தவிர, மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும், மாவட்ட ஆட்சியர்களும் தேர்வு மையங்களை ஆய்வு செய்வார்கள். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

8 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்