சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மாநில வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்: மத்திய நிதிக் குழுவின் தலைவர் ஒய்.வி.ரெட்டி கருத்து

By செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என 14-வது நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை மற்றும் சென்னை பொருளாதார கல்வி நிறுவனம் இணைந்து டாக்டர் ராஜா ஜெ.செல்லையா நினைவு சொற்பொழிவை 14-வது நிதிக் குழுவின் மாற்றம் வளர்ச்சிப்பாதை என்ற தலைப்பில் நடத்தின.

இதில், 14-வது நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஒய்.வி.ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘திட்டக்குழு மூலம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய முறையை மாற்றி, மத்திய அரசே தற்போது நேரடியாக நிதியை ஒதுக்கி விடுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி, மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். திட்ட செலவினம், திட்டமிடா செலவினம் என்ற முறையை மாற்றி ஒரே மாதிரியான செலவின முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்பு அம்சங்கள் 14-வது நிதி கமிஷன் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதை முழுமையாக நடைமுறைப் படுத்தும்போது அதன் பயன்களை நம்மால் பெற முடியும்” என்றார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் சி.ரங்கராஜன் பேசியதாவது: டாக்டர் ராஜா ஜெ.செல்லையா சிறந்த பொரு ளாதார நிபுணராக திகழ்ந்தவர். நிதித்துறையில் அவரின் பங்களிப்பும், கருத்துகளும் மகத்தானவை.

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற் றுள்ளன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை விவகாரத்திலும் மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்