போலி வாக்காளர்களை ஒழிக்க புதிய வழி: தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்-ஐ இணைப்பதின் மூலம், போலி வாக்காளர்களை ஒழிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இதில் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது, பிழையே இல்லாமல் வாக்காளர் பட்டியலில் முழுமையாக திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.

ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்து இருந்தால் தானாக முன்வந்து அதை திருத்தம் செய்வது மற்றும் வாக்காளர் பெயரில் உள்ள திருத்தங்களை சரி செய்வது, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை இணைப்பதற்கு அனைத்துக்கட்சிகள் ஒத்துழைப்பை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அரசியல் கட்சிகளும், வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்குவது குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதன்மூலம் வருகிற தேர்தல்களில் போலி வாக்காளர்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலிலும் ஆதார் எண் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது. அதற்காக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை, மாதம் ஒரு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை ஒழிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்