முதல்வருக்கு கருப்பு கொடிகாட்ட முயற்சித்தவர் கைது

By செய்திப்பிரிவு

மது விலக்கை அமல்படுத்தக் கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.ராமதாசன் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அருகே தனியாக நின்று போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக திடீரென காந்தி சிலை முன்பு வந்து நின்று, மதுவிற்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி போராடிய ராமதாசனை கலங்கரை விளக்கம் போலீஸார் அழைத்து சென்று காவல் நிலையத்தில் அமர வைத்து விட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மெரினா கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே கையில் கருப்பு கொடியுடன் நின்று கொண்டு, மது விலக்கை வலியுறுத்தி இந்த வழியாக செல்லும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கருப்பு கொடி காட்டப்போவதாக கூறினார் ராமதாசன். இதனால் போலீஸார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்