கடல் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சியாமதாரா அறக்கட்டளை சார்பில் ‘ரிட்லே ரன் - 15’ என்ற கடல் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.சென்னை வன உயிரினப் பிரிவு வனச் சரகர் எஸ்.டேவிட்ராஜ் இதை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இது குறித்து சியாமதாரா அறக்கட்டளையின் நிறுவனர் ரஜினிகாந்த் அர்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து கடல் ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை சென்னையை நோக்கி வருகின்றன. அவை இரவு நேரங்களில் நீரை விட்டு வெளியில் வந்து கடற்கரை மணலில் முட்டையிட்டு செல் கின்றன. இந்த கடல் ஆமைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளை விக்கும் ஜெல்லி மீன்கள், ஆல்கா போன்றவற்றை உண்டு வாழ் கின்றன. இதனால் கடல் பகுதி யில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படுகிறது.

கடல் சுற்றுச்சூழலை பாது காக்க வேண்டுமென்றால் கடல் ஆமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தினோம். இதில் 3 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கடற்கரையில் மணலில் வீசப் படும் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு பல ஆமைகள் இறந்துவிடுகின்றன. அதனால் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை போடக்கூடாது என்றும் பொதுமக்களை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்