லயோலா கல்லூரி சமூக வானொலி திட்டம்: பல்கலை. மானிய குழு ரூ.10 லட்சம் நிதி

By செய்திப்பிரிவு

லயோலா கல்லூரியின் சமூக வானொலி திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

லயோலா கல்லூரியில் சமூக வானொலி திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் லயோலா கல்லூரியில் 15 கி.மீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் பகுதி மக்கள் பயனடையும் வகையில் வானொலி சேவை நடத்தப்படுகிறது. இதில் குழந்தை கள், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், கலை உள்ளிட்ட பல தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

லயோலா கல்லூரியை சுற்றி யுள்ள சூளைமேடு, நுங்கம்பாக் கம் பகுதியை சேர்ந்த ஏழை எளி யோருக்கு இலவச வானொலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆய்வுகள் துறை முதல்வர் டாக்டர்.எஸ்.வின்சென்ட் கூறியதாவது:

பத்தாண்டுகளில் இத்திட்டத் தின் வளர்ச்சியை பார்த்து பல்கலைக்கழக மானிய குழு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி தர ஒப்புக் கொண்டுள்ளது. முதல் கட்ட மாக மூன்று லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதனால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது. வேறு எந்த சமூக வானொலித் திட்டத்துக்கும் பல்கலைக்கழக மானிய குழு நிதி தருவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஆண்டனி சாமி கூறும்போது, “மாணவர்கள் படிக்கும் போதே தங்களை சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றி கற்றுக் கொள்ள இத்திட்டம் உதவும் ,”என்றார்.

இத்திட்டத்தின் இணை இயக்கு நர் டாக்டர் ரேவதி ராபர்ட் கூறும்போது, “இந்த ஆண்டு முதல் லயோலா ரேடியோ கிளப் என்பது தொடங்கப்பட்டு மாணவர் களுக்கு வானொலி நிகழ்ச்சி கள் நடத்த பயிற்சி அளித்து மதிப்பெண்கள் அளிக்கப்படு கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் அஸ்வினி, அனுஸ்ரீ ஆகிய இரண்டு திருநங்கைகள் உட்பட 12 பேருக்கு இலவச வானொலி கள் வழங்கப்பட்டன. மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மேலும் 200 பேருக்கு வானொலிகள் வழங்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

46 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்