குடியரசு தின விழாவில் ஜெயலலிதாவுக்கு துதி பாடுவதா?- ஸ்டாலின் காட்டம்

By செய்திப்பிரிவு

குடியரசு தின விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு வெறுக்கத்தக்க வகையில் துதி பாடியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், "தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு அவமானத்தையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வருகிறது.

டெல்லியில் உள்ள அரசு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை சிறப்பிக்கும் வகையில் குடியரசு விழாவை கொண்டாடியுள்ளது. ஆனால், தமிழக அரசு சிறை தண்டனை பெற்றவரின் படத்தை காட்டி வெறுக்கத்தக்க வகையில் துதி பாடுகிறது.

தலை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம் இப்படி தர்ம சங்கடப்படுவதும் இகழ்ச்சிக்கு உள்ளாவதையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்ட இந்த அரசு ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழப்பதோடு மட்டுமன்றி தமிழக மக்களிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

16 mins ago

வாழ்வியல்

40 mins ago

தமிழகம்

56 mins ago

ஆன்மிகம்

14 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்