தேர்வாணையம் மூலம் நிரப்பப்படாத பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுபவை தவிர, ஏனைய காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் பணியிடங்கள் தேர்வாணையம் மூலமாகவோ அல்லது வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையிலோ நிரப்பப் படுவது வழக்கம். ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கென ஏற்படுத்தப்பட்ட ஆசிரியர் தேர் வாணையம்கூட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பை கணக்கில் கொண்டுதான் பணியிடங்களை நிரப்பி வருகிறது. காவல் துறை பணியிடங்களுக்கு கல்வித் தகுதியோடு, உடல் தகுதிகளும் தேவை என்பதால் அறிவிப்பு செய்து தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தச் சூழலில், போக்கு வரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் போது, அறிவிப்பு செய்து மனுக்கள் பெறுவது மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறுவது ஆகிய 2 வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதன்படியே பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வ தால் பயனேதும் இல்லையோ என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங் களில் சுமார் 94 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக் கின்றனர்.

எனவே தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங் களைத் தவிர, ஏனைய காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெற்று, பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று அதில் வாசன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்