கணினிமய பொது விநியோகத் திட்டம் அமல்படுத்தப்படும்

By பிடிஐ

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்கு மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் பாட்டீல் தன்வே எழுத்துமூலம் அளித்துள்ள பதில்:

முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். நலத்திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் பட்டியலை டிஜிட்டல் மயமாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்தப் பட்டியலை அனைத்து மாநிலங்களும் தங்கள் இணைய தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள தகவலின்படி அம்மாநில அரசு தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டு விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் குடும்ப அட்டைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

‘பயோமெட்ரிக்’ முறையிலான விவரப் பதிவுகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47,030 ஆகும். இதுவரை 5 கோடியே ஒரு லட்சத்து 72,297 பேர்களின் விவரங்கள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

6 mins ago

கல்வி

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்