கர்நாடகாவைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை, ரயில் மறியல்

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 500 இடங்களில் இன்று (டிச.4) சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் காரைக்காலில் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நடத்தப்படும் இந்த மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களுக்கு திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தமாகா(மூ), விடுதலைச் சிறுத்தைகள் உள் ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து, பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் துரை.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் சண்முகம் ஆகியோர் அனைத்துத் தரப்பின ரின் ஆதரவுடன் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காவிரிப் பாசனம் பெறும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

சுற்றுச்சூழல்

39 mins ago

க்ரைம்

43 mins ago

இந்தியா

41 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்