சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக 1.பிரதாப்குமார் என்கிற குள்ள பிரதாப் (24) என்பவர் மீது எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்திலும், பார்த்திபன், டில்லிபாபு என்கிற டில்லிபாய்,  4.ஜெங்சிங் என்கிற ஜான் ஜெய்சிங் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேற்படி, குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன்  4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (04.7.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதில் பிரதாப் குமார் (எ) குள்ள பிரதாப் மீது 1 கொலை முயற்சி வழக்கு மற்றும் 2 அடிதடி வழக்குகள் உள்ளது. பார்த்திபன் என்பவர் மீது டி-15 எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 2 அடிதடி வழக்குகள் உள்ளது. டில்லிபாபு (எ) டில்லிபாய் என்பவர் மீது 3 செல்போன் பறிப்பு வழக்குகள் மற்றும் 2 திருட்டு வழக்குகள் உள்ளது. ஜெய் சிங் (எ) ஜான் ஜெய்சிங் என்பவர் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்