சென்னை மாநகராட்சி பள்ளிகளின் நிர்வாகப் பணிகளுக்கு ரூ.5 கோடி

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 88 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளுடன் அலுவலகப் பணி, நிர்வாகப் பணி, கணினி தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஆட்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அப்பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சமாளிக்க பள்ளிகளுக்கு சில தேவைகள் ஏற்படுகின்றன.

அதனால் பள்ளிசார் பணிகளில் ஏற்படும் தேவைகளை மேம்படுத்திடவும், அப்பணிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேவைப்படும் நிதியை, கல்வி அலுவலரிடம் நேரடியாக பெற்று, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இப்பள்ளிகளின் இந்த கல்வி ஆண்டு (2017-18) தேவைக்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 கோடியே 47 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 கோடியே 83 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு நிதியாண்டில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.5 கோடியே 30 லட்சம் ஒதுக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்