போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல் ஆணையர் ஆய்வு

By செய்திப்பிரிவு

போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பூந்தமல்லி சாலையில் நேற்று ஆய்வு மேற் கொண்டு போக்குவரத்து போலீஸா ருக்கு ஆலோசனை வழங்கினார்.

மெட்ரோ ரயில் பணிக்காக 2011 நவம்பரில் ஈவெரா சாலை, ஈகா சந்திப்பு முதல் கெங்கு ரெட்டி சந்திப்பு வரையும், கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை - மேயர் ராமநாதன் சாலை-சேத்துப்பட்டு சந்திப்பு- குருசாமி பாலம் ஈகா சந்திப்பு வரையும் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

தற்போது மெட்ரோ ரயில் பணி இப்பகுதியில் முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி முதல் ஈவெரா சாலை இருவழிப் பாதையானது. முதல் நாளான நேற்று முன்தினம் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீ ஸாருக்கு சில ஆலோசனைகளை யும் காவல் ஆணையர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

ஜோதிடம்

10 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்