பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் சுகேஷ் ஆஜர்

By செய்திப்பிரிவு

பண மோசடி வழக்கில் இடைத் தரகர் சுகேஷ் பாலாஜி நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாநகராட்சியில் சலையலறை உபகரண ஒப்பந்தம் பெற்றுத் தரு வதாகக் கூறி ரூ.2.34 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் பாலாஜி, அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் மீது, கோவையைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் 2011-ல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் இருவரை யும் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை ஜேஎம்-2 நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத் துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் பாலாஜி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந் நிலையில், மோசடி வழக்கு விசா ரணையில் ஆஜராகாத சுகேஷ் பாலாஜிக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் அவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் வழக்கு ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று கோவை நீதிமன்றத்தில் சுகேஷ் பாலாஜியும், அவரது தந்தை சந்திரசேகரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி இரு வரிடமும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்பு சாட்சி விசாரணைக்காக ஆக.3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சுகேஷ் பாலாஜியை போலீஸார் ரயில் மூலம் டெல்லிக்கு அழைத் துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்