முதியோர் உதவித் தொகை மனுக்கள் பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

முதியோர் உதவித் தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப் படுகிறது. நிலுவையில் உள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரு கின்றன என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடந்தது.

ஐ.பெரியசாமி (திமுக):

தமி ழகத் தில் பல ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொண்டிருந்தவர்களுக் கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:

முதியோர் உதவித் தொகை 60 வயது நிரம்பியவர்களுக் குத்தான் வழங்கப்பட வேண்டும். ஆனால் 30, 35 வயது தகுதியில் லாதவர்களின் பெயர்கள் இருந் ததால்தான் நீக்கப்பட்டன. தகுதி யானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:

2009-10-ல் 19 லட்சமாக இருந்த உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கை, 2010-11-ல் 23 லட்சமாக உயர்ந்தது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு எண்ணிக்கையை உயர்த்தியிருந் தீர்கள். கடந்த திமுக ஆட்சியில் உதவித் தொகைக்காக ரூ.ஆயி ரத்து 700 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் ரூ.4 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை விண் ணப்பங்கள் தொடர் ஆய்வில் உள்ளன. தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

துரைமுருகன்(திமுக):

எம்எல்ஏக் களை நம்ப வேண்டும். நாங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு முதி யோர் உதவித் தொகை வழங்க வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:

தற்போது நிலுவையில் உள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரு கின்றன. தகுதி இருப்பின் வழங் கப்படும்.

ஐ.பெரியசாமி (திமுக):

நாங்கள் 30,40 வயதுடையவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வில்லை. வட்டாட்சியர்கள்தான் படிவங்க ளில் கையெழுத்திடுகின் றனர். அரசு ஊழியர்களான அவர் கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். 30, 40 வயதுடையவர்கள் ஆதர வற்ற விதவைகளாக இருந்தால் அவர் களுக்கு உரிய உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்