விவசாய உற்பத்தியை பாதிக்கிற பருவநிலை பிரச்சினையில் தீவிர கவனம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விவசாய உற்பத்தியை பாதிக்கிற பருவநிலை பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில், மாநில அளவிலான கடன் உதவி கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இதில், 2017-18ம் ஆண்டுக்கான தமிழகத்துக்குரிய மாநில அளவிலான கடன் உதவி அறிக்கையை வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் வெளியிட்டார். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) கே.சண்முகம் முன்னிலை வகித்தார். இதில், எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல், பாலை என ஐந்து வகை நிலங்கள் உள்ளன. விவசாயிகள் அந்த நிலம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள முன்னுரிமை, முக் கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்காக திட்டங்கள் வகுக்க வேண்டும்.

பருவநிலை மாறுபாட்டால் விவசாய உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கின்றனர். இவ்வாறு உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பங் களைச் சேர்ந்த பெண்களை அதே துறையில் ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, அவர் களுக்கு கிசான் கார்டுகளை வழங்க வேண்டும்.

‘2022-ம் ஆண்டில் விவசாயி களின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட உள்ளது’ என்று சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி களின் வருமானத்தை இரட்டிப் பாக்க மண்டல அளவிலான திட்டங் கள் வகுக்க வேண்டும். ஊடுபயிர் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண் டும். உதாரணமாக, மலேசியாவில் தென்னை மரங்களுக்கு நடுவே அன்னாசிப் பழச் செடிகள் ஊடு பயிராக விளைவிக்கப்படுகின்றன. இங்கும் இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டும். தமிழக கடற்கரை 1,000 கி.மீ. தூரம் கொண்டது. இங்கு வசிக்கும் 20 சதவீத மக்கள் கடற்கரை சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கடந்த 1964-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் 10 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி 1968-ம் ஆண்டு 17 மில்லியன் டன்னாக அதிகரித்தது. பருவ நிலை மாற்றத்தால் பஞ்சாப் மாநிலத்தில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது. இதனால், 500 கிலோ கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே, பருவ நிலை விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமி நாதன் கூறினார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) கே.சண்முகம் பேசும்போது, ‘‘பருவ நிலை மாற்றம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சறுத்தலாக உள் ளது. 50 சதவீத விவசாய நிலங்கள் வறண்டுள்ளன. சம்பா பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வறண்ட நிலத்தில் விவசாயம் செய்ய மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது’’ என்றார்.

நபார்டு வங்கி தலைமைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, மாநில அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் நபார்டு கைகொடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இன்று வெளியிடப்பட்டிருக்கும் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி அடிப்படைக் கட்டமைப்புத் தேவை களை முழுமையாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி பொது மேலாளர் மோகனா, தமிழக அரசு விவசாய உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல் இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய குமார், பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

வணிகம்

42 mins ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்