புதிய மின்னணு தகவல் பலகைகள் செயல்படாததால் திருவள்ளூரில் ரயில் பயணிகள் அவதி

By இரா.நாகராஜன்

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் நேரம் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்கள் ஆகியவற்றை தெரிவிக்கும் மின்னணு தகவல் பலகைகளை கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே நிர்வாகம் அமைத்தது. ஆனால், அந்த மின்னணு தகவல் பலகைகள் செயல்பாட்டுக்கு வராததால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 160 மின்சார ரயில்கள் செல்கின்றன. மும்பை, திருப்பதி, பெங்களூர், மங்களூர் செல்லும் விரைவு ரயில்களும் இந்த ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் ஒன்று முதல், 5 வரையுள்ள நடைமேடைகளில், ரயில்கள் வந்து செல்லும் நேரத்தைக் காட்டும் 5 மின்னணு தகவல் பலகைகள் பொருத்தப்பட்டன. அதேபோல், 2 வது நடைமேடையில், விரைவு ரயில் பெட்டிகளின் எண்களை குறிக்கும் வகையில் 24 சிறிய மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டன.

ஆனால், தகவல் பலகைகள் அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், ரயில்கள் வரும் நேரம், ரயில்கள் நிற்கும் நடைமேடை ஆகியவற்றை, ரயில்கள் வரும் நேரத்துக்கு சற்று முன்னால், ஒலிப்பெருக்கியில் அறிவிப்பதன் மூலம் அறிந்துகொள்ளும் பயணிகள், மிகுந்த சிரமத்துடன் நடைமேடைகளைக் கடந்து, ரயிலில் ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், முதியவர்கள், பல சமயங்களில் ரயிலில் ஏற முடிவதில்லை. எனவே, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள மின்னணு தகவல் பலகைகள் செயல்பாட்டுக்கு வர, அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார் அவர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

“மின்னணு தகவல் பலகைகளை இயக்குவதற்கான பணியாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

எனவே, விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அதன்பிறகு, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகைகள் செயல்பாட்டுக்கு வரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 mins ago

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

53 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்