முதுகலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் விற்பனை நாளை தொடங்குகிறது: நந்தனம் பள்ளியில் விற்பனை

By செய்திப்பிரிவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி இயக்குநர்களும் (கிரேடு-1) போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் நவம்பர் 10 (திங்கள்கிழமை) முதல் 21-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் மட்டும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்குப் பதில் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (கோட்டூர்புரம் பாலம் அருகில்) விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 10-ம்தேதி (திங்கள்) முதல் 26-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நந்தனம், அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500 (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.250. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ, இந்தியன் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்