தனியார் பள்ளிகளை கண்டித்து கல்லுரி மாணவர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர் களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 25 சதவீத இடஒதுக்கீட்டை சரிவர நடைமுறைப்படுத்தாத பள்ளிகளைக் கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கம், தெருவோரம் வாழும் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கல்லூரி மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த அறப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்