ஆவினை தொடர்ந்து பாண்லே முடிவு: புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு

By செய்திப்பிரிவு

புதுவையில் அரசு நிறுவனமான ’பாண்லே’ மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் ‘ஆவின்’ பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில்,, புதுவையிலும் ‘பாண்லே’ பால் விலையை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நீல நிற பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.10-ம், பச்சை நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.8-ம் உயருகிறது. இதுகுறித்து ‘பாண்லே' மேலாண் இயக்குநர் மருதவாணன் வெளியிட்ட உத்தர வில், “இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, இதுவரை ரூ.15-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. பச்சை நிற பசும்பால் பாக்கெட் விலை ரூ.19 ஆக உயருகிறது. பச்சை நிற 200 மி.லி. பாக்கெட் விலை ரூ.6-ல் இருந்து ரூ.8 ஆக உயருகிறது. இதுபோல, ரூ.13-க்கு விற்கப்பட்ட 500மி.லி. நீல நிற பாக்கெட் பால் விலை ரூ.18 ஆக உயருகிறது. இந்த விலை உயர்வு வரும் 27 -ம் தேதி (நாளை) காலை முதல் அமலுக்கு வரும். பால் கொள்முதல் விலையும் ரூ.24ல் இருந்து ரூ.30ஆக உயர்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்