தொண்டர்களின் கடிதங்களால் திடமாக இருக்கிறார் சசிகலா: சிறையில் சந்தித்த நடிகர் கருணாஸ் தகவல்

By குள.சண்முகசுந்தரம்

‘தொண்டர்கள் எழுதும் கடிதங் களால் முன்பைவிட திடமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் சசிகலா’’ என்று பெங்களூரு சிறையில் அவரை சந்தித்த நடிகரும் எம்எல்ஏ-வுமான கருணாஸ் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

கட்சியை விட்டு வி.கே.சசிகலா வும் அவரது குடும்பத்தினரும் ஒதுக்கிவைக்கப்படுவதாக அதிமுக முன்னணி தலைவர்கள் அறிவித்திருந்தாலும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். இதேபோல், திஹார் சிறையில் இருக்கும் டி.டி.வி.தினகரனையும் அவரது விசுவாசிகள் சந்தித்து வருகிறார் கள். இந்த நிலையில், நடிகர் கரு ணாஸ் கடந்த 20-ம் தேதி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் பேசிய கருணாஸ் கூறியதாவது:

சசிகலா சிபாரிசு செய்ததால் தான் எனக்கு அதிமுக கூட்ட ணியில் போட்டியிட வாய்ப்பளித் தார் ஜெயலலிதா. அந்த விசுவாசத் தில்தான் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பெங்களூரு சிறைக்குச் சென்றேன். சிறையில் சுமார் 40 நிமிடங்கள் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். சிறை வாழ்க்கை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரை சோர்வடைய வைத்திருக்கும் என நான் நினைத் திருந்தேன். ஆனால், கூவத்தூரில் சந்தித்தபோது இருந்ததைவிட கூடுதல் நம்பிக்கையுடனும் திடமாகவும் இருக்கிறார் சசிகலா. அதற்கு காரணம் தொண்டர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள்.

கட்சியை கட்டுக்கோப்பாக காப் பாற்றும்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடமிருந்து தினமும் சசிகலாவுக்கு கடிதங்கள் வருகின் றன. அவை அனைத்தையும் படித் துப் பார்த்து அத்தனைக்கும் பதில் எழுதுகிறார். அவருக்கான இப்போதைய நம்பிக்கை தொண் டர்கள் அவருக்கு எழுதும் இந்தக் கடிதங்கள்தான் என்பதை அவரது பேச்சில் புரிந்து கொண்டேன்.

உயிரை கொடுத்தாவது...

‘‘இக்கட்டான சூழலில்தான் உண்மையான விசுவாசிகளை அடையாளம் காணமுடியும். இது நானும் அக்காவும் (ஜெயலலிதா) கடந்த காலங்களில் அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இப்போது, அந்த அனுபவத்தை தொண்டர்கள் எனக்குக் கொடுத் திருக்காங்க’’ என்று சொன்ன சசிகலா, ‘‘இந்தத் தொண்டர் களுக்காக என் உயிரைக் கொடுத் தாவது கட்சியை காப்பாற்றுவேன். இதை நான் வேறு யாரையும் நம்பிச் சொல்லல.. உண்மையான தொண்டர்களை நம்பிச் சொல் கிறேன்’’ என்றும் சொன்னாங்க.

அதிமுக-வுக்குள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு கள், ஓ.பி.எஸ். அணியின் நடவடிக் கைகள், மத்திய அரசின் திரை மறைவு நடவடிக்கைகள் என அத்தனை தகவல்களையும் சசிகலா தெரிந்து வைத்திருக்கிறார். வெளியில் இருப்பவர்கள் அவரை ஒதுக்கி வைத்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர், ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்சியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்ற திடமான மனத்துடன் இருக்கிறார் என்று சொன்னார் கருணாஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்