ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன், திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக 98 எம்.எல்.ஏ.க்களுடன் திமுக கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம் என ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தா.பாண்டியன் பங்கேற்பு:

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனும் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்