அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டைத் தடுக்க குழந்தைகளுக்கு ரேடியோ அதிர்வலை கைப்பட்டை அணிவிக்கும் திட்டத்தை செயல் படுத்த மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கையை தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் 15.6.2013-ல் பிறந்த ஆண் குழந்தையை பெண் ஒருவர் திருடிச் சென்றார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி சார்பில் மனுதாரரின் மகனை கண்டுபிடிக்க மேலும் அவகாசம் கோரப்பட்டது. அப்போது, நீதிபதி கள் “இந்த வழக்கில் பெண் வழக்கறிஞர்கள் 2 பேர் வழக்கறி ஞர் ஆணையர்களாக நியமிக்கப் பட்டு, அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆய்வு நடத்தி குழந்தைத் திருட்டை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என அறிக்கை தாக்கல் செய்தனர். குழந் தைகளுக்கு ரேடியோ அதிர்வலை கைப்பட்டை அணிவிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அந்த உறுதி என்ன ஆனது?” என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “மதுரை அரசு மருத்து வமனையில் குழந்தைகளின் கையில் ரேடியோ அதிர்வலை பட்டை அணிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?. அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டவாறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா?” என நீதிபதிகள் கேட்டனர்.

குழந்தைத் திருட்டு தொடர் பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இங்கு மாறுதல் செய்யப் பட்ட வழக்கையும், இந்த நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு களையும் செப்.23-ல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனை யைப் போன்று தமிழகத்தில் பிற அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு ரேடியோ அதிர் வலை கைப்பட்டை அணிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குழந்தை கடத் தல் வழக்கில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

54 mins ago

கல்வி

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்