பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி: சாத்தூர் அருகே பரிதாபம்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் தொழி லாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது:

சிவகாசி - திருத்தங்கல் சாலை யைச் சேர்ந்தவர் ஜெய் சங்கர்(48). சாத்தூர் ஏழாயி ரம்பண்ணை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகி றது. நாக்பூரில் உள்ள மத்திய பெட் ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 70-க்கும் மேற் பட்ட அறைகளில் அனைத்து ரக பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். நேற்று காலை தரைச் சக்கரம் மத்தாப்பு தயாரிப்பதற்காக ஓர் அறையில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அலுமினிய பவுடர், பச்சை உப்பு மற்றும் போரிக் ஆசிட் போன்றவற்றை கலந்தபோது ரசாயன மாற்றம் ஏற்பட்டு திடீரென பலத்த சப்தத்துடன் மருந்து கலவை வெடித்துச் சிதறியது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

அப்போது, அந்த அறையில் மருந்து கலந்துகொண்டிருந்த கோவில்பட்டி அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டியைச் சேர்ந்த குருசாமி(61), வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்ணகுடும்பம் பட்டி ராதாகிருஷ்ணன்(38) ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற தொழி லாளர்கள் அனைவரும் பாது காப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து பொக்லைன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி யிருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர்.

விபத்து நடந்த இடத்தில் விரு து நகர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் (பொறுப்பு) ராஜரா ஜன், சாத்தூர் டிஎஸ்பி குமார், கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பட்டாசு ஆலையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். உரிய இழப்பீடு வழங்குவதாக பட்டாசு ஆலை நிர்வாகம் கூறி யதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும், விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமை யாளர் ஜெய்சங்கர் மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்