தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை பெற்றோ ரிடம் திருப்பி வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள முன்னணி பள்ளிகள், அளவுக்கு அதிகமாக பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்கின்றன.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமை யிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில் புகார் அளித்தபோது, கூடுதலாக வசூலித்த கட்டணத்தை பெற்றோரிடம் திருப்பி அளிக்க அக்குழு உத்தரவிட்டது. எனவே, இப்பள்ளிகள் கூடுதலாக வசூலித்த பணத்தை பெற்றோரிடம் திருப்பி அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இதுதொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டு 6 வாரத்துக்குள் தெரிவிக்குமாறு அரசு வழக் கறிஞருக்கு உத்தரவிட்டு விசா ரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

48 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்