ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டம்: தமிழகம் முழுவதும் பல இடங்களில் மறியல்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்க வில்லை. இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுதொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந் தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி பல இடங்களில் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கி டையே, பொங்கல் பண்டிகையை யொட்டி பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத் தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 200-க்கும் அதிகமானோரை கைது செய்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

சென்னை மெரினாவில்..

இந்நிலையில், ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில் மாண வர்கள், இளைஞர்கள், பொது மக்கள் நேற்று காலை முதல் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்ட அழைப்பை தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்று காலை சந்தித்து ஆதரவு தெரிவித் தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள், ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்’, ‘பீட்டாவை தடை செய்ய வேண்டும்’ என கோஷ மிட்டனர். போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்து பேச வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத் தினர்.

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. கோபிச்செட்டிப் பாளையம் பெரியார் திடலில் கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், தடியடி நடத்திய காவல் துறையினருக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

கோவை கொடீசியாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி, சேலம், ஆத்தூர், புதுக் கோட்டை, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல் துறையின ருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்