விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் கூட்டமைப்பு செயலர் செ.நல்லசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

அரசு ஊழியர்களுக்கு விலை வாசி மற்றும் வாழ்க்கைப் புள்ளி ஒப்புநோக்கு அடிப்படை யில் ஊதியக்குழு ஊதியத் தொகையை நிர்ணயம் செய் கிறது. அதை அப்படியே ஏற்று செயல்படுத்துவது நடைமுறை யில் உள்ளது.

அதன்படி, மத்திய அமைச் சரவை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையை ஏற்றுள்ளது. சுதந்திர இந்தியாவில் விவசாயி களுக்கு மானியம், சலுகை, கடன் தள்ளுபடி, வருமானவரி விலக் களிப்பு என பலவற்றைக் கொடுத் தும் பலனில்லாததால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் தலைமையில் விவசாய கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அந்த கமிஷன் 2005-ல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டது.

அனைத்து வேளாண் விளை பொருளுக்கும் பட்டறிவு அடிப் படையிலான கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே பரிந்துரையின் சாராம்சம். மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதை கிடப்பில் போட்டுவிட்டது. அதன்பிறகு, 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மோடி தலைமையிலான அரசும் இதை கண்டுகொள்ளவில்லை. 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக்கூடாது என நாங்கள் கூறவில்லை.

சம்பள கமிஷன் பரிந்துரை யையும், விவசாய கமிஷன் பரிந்துரையையும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்